Tirupathur | திருட்டு நகை விவகாரத்தில் கைதான அதிமுக நிர்வாகியின் மகன்
திருப்பத்தூரில் திருட்டு நகை விவகாரம் தொடர்பாக அதிமுக நகரச் செயலாளரின் மகனை கர்நாடகக் காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டித்து, அதிமுகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் சரவணன், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் பங்காரப்பேட்டை காவல்துறையினர் சரவணனின் மகன் சந்துருவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆந்திரக் காவல்துறையினரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது
