அதிமுகவில் இருந்து மும்மொழி கொள்கைக்கு கையெழுத்து போட்ட கை
பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ கையெழுத்திட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், எல்லாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், மனதளவில் பாஜகவிற்கு ஆதரவு எனவும், திமுக மொழியை வைத்து அரசியல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story