Thoothukudi | தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் புகார் - பரபரப்பை கிளப்பிய தவெக பெண் நிர்வாகி

Thoothukudi | தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் புகார் - பரபரப்பை கிளப்பிய தவெக பெண் நிர்வாகி

Thoothukudi | TVK | தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் புகார் - பரபரப்பை கிளப்பிய தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரைட்டரின் தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, பெண் நிர்வாகி ஒருவர் தென்மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளித்தார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க. பெண் நிர்வாகி ரோகிணி ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், புகாரைத் திரும்பப் பெறுமாறு தன்னை மிரட்டியதாகவும், தனது செல்போனை வழக்கறிஞர் ஒருவர் பறித்துச் சென்றதாகவும் ரோகிணி குற்றம்சாட்டினார். மேலும், மாவட்ட செயலாளர் பிரைட்டரின் உறவினர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிய அவர், தனக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜியிடம் புகார் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com