"இதுதான் திராவிட மாடல்..!" உதயநிதி நச் பதில்
கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுவின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்விழா மலரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பொன்முடி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, பல ஊரில் அந்த மாடல், இந்த மாடல் என்று பலர் கூறுவதாகவும், ஆனால் கருணாநிதி உருவாக்கியதுதான் உண்மையான திராவிட மாடல் என்று கூறினார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, 41 நிறுவனங்களை உருவாக்கியதாகவும், ஆண்டுதோறும் 2 நிறுவனங்கள் தொடங்கியதே பெரிய சாதனை என்றும் அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டினார்
Next Story
