Vaiko| ``இதெல்லாம் தந்திரம்’’ - வைகோ போட்ட வழக்கில் தமிழக அரசை கடுமையாக எச்சரித்த ஐகோர்ட்

``இதெல்லாம் தந்திரம்’’ - வைகோ போட்ட வழக்கில் தமிழக அரசை கடுமையாக எச்சரித்த ஐகோர்ட்

சீமைக்கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தாமதப்படுத்தும் தந்திரமாகவே கள ஆய்வு நடத்தப்படும் என்ற அரசின் வாதம் உள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கில், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி அனைத்து மாவட்டங்களிடமும் போதுமான அளவில் உள்ளதால், சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் கனிம நிதியிலிருந்து 5 கோடி ரூபாயை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முதற்கட்டமாக நீர்நிலைகளில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com