"இதெல்லாம் ஏமாற்று வேலை.." - கொந்தளித்த ஈபிஎஸ்

x

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை- ஈபிஎஸ்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஒய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த நான்கரை ஆண்டுகளில் எதுவும் செய்யாமல் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில் ஏமாற்றுத் திட்டத்தை அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றி விட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என அறிவித்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்