"நீதிமன்றத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது"-திருநாவுக்கரசர்

ஹெச்.ராஜா நீதிமன்றத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது, அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்கு மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நீதிமன்றத்தை விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு, கண்டனம் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com