சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவன் விருப்பம்...

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவன் விருப்பம்...
Published on
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர், தி.மு.க.உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தற்போது தி.மு.க. தலைமையில் மட்டும்தான் கூட்டணி அமைந்து உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com