இந்தி விவகாரம்..! திருமா பரபரப்பு பேச்சு | Thirumavalavan

x

பிறமொழி பேசக்கூடிய மக்களை இந்திவாலாக்களாக மாற்ற பாஜக முயற்சி செய்வதாக, விசிக தலைவர் திருவருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், இந்தி திணிப்பு ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை தேசிய, அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்பதே இந்தி பேசக்கூடியவர்களின் எண்ணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க. அரசு ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்