"நீர் நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடவேண்டும்" - திருமாவளவன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சந்தித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சந்தித்தார். சென்னை - கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முதலமைச்சரிடம் 3 கோரிக்கைகளை முன் வைத்ததாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமங்கள் தோறும் உள்ள நீர்நிலைகளில் கரைகளை பலப்படுத்த பனைமர விதைகளை நட வேண்டும், ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உதவி தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com