ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்

ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.
ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
Published on
சேலம் மாவட்டம் தளவாய்பட்டியில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com