"திருமாவுக்கு சட்டம் தெரியவில்லை" - அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டம் படித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, மது விலக்கு சட்டம் குறித்து தெரியவில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மது மற்றும் மதுவிலக்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில பட்டியலில் எட்டாவது இடத்தில் வருகிறது என்றும், சட்டம் படித்தவரான திருமாவளவனுக்கு இது தெரியவில்லை என்றும் விமர்சித்தார். மாநிலப் பட்டியலில் வரும் விஷயத்திற்கு, மத்திய அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com