``2026ல் திருமா துணை முதல்வராவது உறுதி’’ - விசிக அமைப்பு செயலாளர்
தமிழக அரசியல் களம் ஆறு மாதத்தில் மாறும், வருகிற 2026ல் திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆவது உறுதி என விசிக மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் விசிகவினர் மத்தியில் பேசிய அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் துணை முதல்வர் ஆவதற்கான வாய்ப்பிருப்பதாக கூறினார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சி யாருக்கும் அடிமை இல்லை என்றும், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே தான் எனவும் தெரிவித்தார்.
Next Story
