DMDK | "சாதி அடிப்படையில் பொறுப்பு குடுத்துருக்காங்க.." தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு

x

திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சாதி அடிப்படையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக கூறி , வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். ஆனால், கட்சிக்காக நீண்ட காலமாக செயல்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு பொறுப்பு அளிப்பதாக கூறி சில நிர்வாகிகள், மோகன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்