"அரசியலுக்கு தகுதியற்றவர்கள்..." - எதிர்கட்சிகளை விளாசிய திவ்யா சத்யராஜ்

x

மக்களாட்சி எது மன்னராட்சி எது என்று தெரியாதவர்கள், அரசியலுக்கு தகுதியற்றவர்கள் என்று எதிர்கட்சியினரை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மக்கள் பணத்தை தாங்கள் சூறையாடுவதாக விமர்சித்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை, புள்ளி விவரத்துடன் ஆதாரத்தை சமர்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்