Therthal Thiruvizha | DMK | ஹாட்ரிக் வெற்றி - திமுகவின் இரும்புக்கோட்டையாக மாற்றிய கோவி செழியன்
Therthal Thiruvizha | DMK | Thiruvidaimaruthur | Govi Chezhiaan | ஹாட்ரிக் வெற்றி - திமுகவின் இரும்புக்கோட்டையாக மாற்றிய கோவி செழியன் 2021-ல் திமுக ஹாட்ரிக் வெற்றி - திருவிடைமருதூர் நிலவரம் என்ன? தஞ்சாவூர் மாவட்டத்துல இருக்கிற இந்த தொகுதி, கும்பகோணம் தாலுகாவில் சில கிராமங்கள், திருவிடைமருதூர் தாலுகாவில் பல கிராமங்கள், திருப்பனந்தாள், வேப்பத்தூர், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளை உள்ளடக்கியது. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், நவக்கிரக கோயில்கள் என ஆன்மீக தளங்கள் நிறைந்த தொகுதியாக இருக்கு. புகழ்பெற்ற ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் இருக்குற தொகுதி. டெல்டாவின் கடைகோடி பகுதியாக இருக்கும் தொகுதியில், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களே மக்களுடைய பிரதான வாழ்வாதாரமாக இருக்கு. திருபுவனம் பகுதியில் பட்டு கைத்தறி நெசவு, குத்துவிளக்கு மற்றும் பாத்திரங்கள் தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருந்துட்டு வருது.
