``சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ - கண்டுபிடித்து கான்ட்ராக்டரை ரெய்டுவிட்ட அமைச்சர்
"அரசு கட்டுமானங்களில் குறைபாடு இருந்தால் சமரசத்திற்கு இடமில்லை" - அமைச்சர் எ.வ.வேலு கண்டிப்பு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு குறைகள் இருந்ததை கண்டறிந்து ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பீட்டில், பொதுப்பணித்துறை சார்பில் இரு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலும், பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கட்டுமானப் பணிகளில் குறைகள் இருந்ததை கண்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், அரசு கட்டிடம், சாலை கட்டுமான பணிகளில் தரக்குறைபாடு, முறைகேடு இருந்தால் எந்த சமரச பேச்சுக்கும் இடமில்லை எனத் தெரிவித்தார்.
