தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான் - டிடிவி தினகரன்
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டிதான் இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய பாஜக-வினர் முயற்சி செய்து வருவதாக கூறினார். தான் 5வது அணி அமைப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
