காங். நிர்வாகி கன்னத்தில் பளார்... - வெளியான பரபரப்பு காட்சி

தென்காசி மாவட்டம், சுரண்டையில் செல்போன் கடை வைத்திருக்கும் சதீஸ்வரன் என்பவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி தேவேந்திரன், கடை புகுந்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் உள்ள கால்மிதியில் இருந்த தூசியை சதீஸ்வரன் தட்டியபோது, அருகில் இருந்த தேவேந்திரன் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதமானது வளர்ந்து, கைகலப்பாகி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவேந்திரன், அவரது ஆதரவாளர்களை திரட்டி வந்து, சதீஸ்வரனை தாக்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com