``நீட் விலக்குக்கு பிறந்தது புதிய வழி’’ - தீர்ப்பால் எதிர்பாரா திருப்பம்
ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீட் விலக்கு விஷயத்திலும் பொருந்தும் என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடியாது என்று சிலர் கூறிய நிலையில், ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும் பொருந்தும் எனக்கூறினார். மேலும், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பல்கலை.களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கி முதல்வர் வேந்தராக பொறுப்பேற்பதற்கு வழிவகுக்கும் எனவும் கூறினார்.
Next Story
