Nirmala Sitharaman | Budget | 2026-2027 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.. எப்போ தெரியுமா?
ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்?
2026–2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி 28ஆம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 29ஆம் தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால், அதே நாளில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறவுள்ள நிலையில், முதல் பகுதி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை, இரண்டாம் பகுதி மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது.
