``போராட்டம் வெடிக்கும்'' சீமானை எச்சரித்த புகழ் பாலாஜி

x

தெலுங்கு இன மக்கள் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறாக பேசினால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தெலுங்கர் முன்னேற்ற கழக மாநில தலைவர் புகழ் பாலாஜி தெரிவித்துள்ளார். தெலுங்கு இன மக்களை அவமதிக்கும் வகையில் சீமான் தொடர்ச்சியாக பேசி வருவதாக குற்றம்சாட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் தெலுங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்