Vijay | TVK | விஜய் வரும்போது பறவை காவடி எடுத்த தொண்டருக்கு நேர்ந்த அதிர்ச்சி

விஜய் வரும்போது பறவை காவடி எடுத்த தொண்டருக்கு நேர்ந்த அதிர்ச்சி

#vijay #tvk விஜய்க்காக பறவை காவடி எடுத்தவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு வேலூரில் தவெக தலைவர் விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக பறவை காவடி எடுத்து வந்த நபர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வந்திருந்தார். அவருக்கு மாலை அணிவிப்பதற்காக தாட்டிமானப்பல்லி கிராமத்தை சேர்ந்த தவெக உறுப்பினர் ஏழுமலை, பறவை காவடி எடுத்து வந்தார். அனுமதியின்றி பறவை காவடி எடுத்து வந்த அவரையும், கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் என்பவரையும் போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர். தற்போது அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com