Pollachi Jayaraman | AIADMK | "மீண்டும் ஆடு, மாடு வழங்கும் திட்டம்.." பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி
Pollachi Jayaraman | AIADMK | "மீண்டும் ஆடு, மாடு வழங்கும் திட்டம்.." பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி #PollachiJayaraman #AIADMK #TNPolitics பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், மரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்கத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, கறவைப் பசுக்கள் மற்றும் நாட்டுக்கோழி வழங்கும் திட்டங்கள் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தின" எனப் பெருமிதம் தெரிவித்தார். தற்போது இந்தத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரமின்றித் தவிப்பதாக அவர் சாடினார். திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்திட்டங்களை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
