"திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.." எடப்பாடி பழனிசாமி காட்டம் | Thanthitv

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், கடந்த மே மாதம் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும், நிர்வாக முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் அரசு உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் இதுதொடர்பாக அதிமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com