Karur | DMK | TN Election | கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை பூ தூவி வரவேற்ற மக்கள்

கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை பூ தூவி வரவேற்ற மக்கள்

Karur | DMK | TN Election | கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை பூ தூவி வரவேற்ற மக்கள் #karur #dmk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை பூ தூவி வரவேற்ற மக்கள் கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வானவேடிக்கை முழங்கத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரெட்டிபாளையம் மற்றும் தீரன் நகர் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்" எனத் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படுவதுடன், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் முன்வைத்தார். மக்கள் நலத் திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com