தொகுதி மாறி வந்த பேப்பர் - உடனே நவாஸ் கனிக்கு போன் போட்ட துரை வைகோ

x

ராமநாதபுரம் எம்பியை தொடர்பு கொண்டு, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவ, துரை வைகோ கோரிக்கை விடுத்தது பாராட்டை பெற்றது.

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகத்தில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை திருச்சி எம்பி துரை வைகோ பெற்றுக் கொண்டிருந்தார். அப்​போது, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் 3 சக்கர வாகனம் கேட்டு மனு அளித்தார். இருப்பினும் துரை வைகோ, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

நவாஸ் கனியும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொகுதி மாறி வந்த மனுவிற்கும் உதவி செய்த துரை வைகோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்