DayanidhiMaran | EPS |"முதுகில் குத்தி சிறைக்கு அனுப்பியவர்.." -கடுமையாக அட்டாக் செய்த தயாநிதி மாறன்

"முதுகில் குத்தி சிறைக்கு அனுப்பியவர்.."

தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை முதுகில் குத்தி சிறைக்கு அனுப்பியவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வளர்ந்த வீட்டிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், வருமான வரி சோதனைக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், இந்தி மட்டுமல்ல தேவையெனில் எந்த மொழியையும் கற்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com