அரசுக்கு எதிராக ஆளுநர் போட்ட பிளான் - ஏப்.25 காத்திருக்கும் சஸ்பென்ஸ்
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் தமிழக அரசுக்கு போட்டியாக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழக அரசின் மசோதா விவகாரம் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஆளுநர் வேந்தராக இருந்தாலும் துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பல்கலைக் கழக செயல்பாடுகளின் அதிகாரம் மாநில அரசின் வசம் வந்துவிட்டது.
இதனையடுத்து, கடந்த 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில், தமிழக அரசுக்கு போட்டியாக வருகிற 25, 26ம் தேதி ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.
ஆளுநருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இருப்பதால் இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி நிலவும் நிலையில்,
இந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
