சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கைது.!

கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
x

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கைது.!

கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவருக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால், அனுமதியின்றி போராத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்த 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்