சென்னை முழுவதும் வர போகும் மாற்றம்... அமைச்சர் சொன்ன தகவல்

x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே,என்,நேரு, சென்னையில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்கங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், வரும் ஆண்டில் 60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 273 பூங்காக்கள் 30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறந்த நிறுவனங்கள் முன்வந்தால் பூங்கா பராமரிப்பு பணி தனியாரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்