Central Minister L Murugan | BJP | Alliance | "கூட்டணி உடையும்.." - எல்.முருகன் பரபரப்பு பேச்சு

x

திமுக கூட்டணி, உடையும் கூட்டணி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் பேசிய எல்.முருகன் திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் வெளியேற தயாராக உள்ளதாகவும், திமுக மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருப்பதால், அந்த அதிருப்தி தங்கள் மீதும் வரக் கூடாது என கூட்டணி கட்சிகள் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, திமுக கூட்டணி ஒரு உடையும் கூட்டணியாகவே உள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் பள்ளி மாணவர்கள் வரை சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்