"அது துப்பாக்கிச் சூடு இல்லை" BJP பிரமுகர் விவகாரத்தில் திடீர் திருப்பம்
சிதம்பரம் அருகே பாஜக நிர்வாகி மீது துப்பாக்கி சூடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சிறுவன் கிரிக்கெட் விளையாடிய போது செல்போன் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. சிதம்பரம் அருகே B.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகியான அஸ்கர் அலிகான். இந்த நிலையில் அஸ்கர் அலி தனது வீட்டின் அருகே நின்றிருந்த போது தன்னை யாரோ துப்பாக்கியால் சுட்டதாகவும் அதனால் செல்போன் சேதமடைந்ததாகவும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அஸ்கர் அலி வீட்டின் அருகே உள்ள சிறுவன் ஒருவன் தென்னை மட்டை மற்றும் ஜல்லிகள்ளை வைத்து கிரிக்கெட் விளையாடிய போது வேகமாக அஸ்கர் அலி செல்போனில் பட்டதால் சேதமடைந்தது தெரியவந்தது.
Next Story
