பாஜகவினர் அதிமுகவை விமர்சித்ததால் பாஜகவை எதிர்த்தேன் - தம்பிதுரை

பாஜகவினர் அதிமுகவை விமர்சித்த வந்ததால் தான் நானும் அவர்களை எதிர்த்து வந்தேன் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
பாஜகவினர் அதிமுகவை விமர்சித்ததால் பாஜகவை எதிர்த்தேன் - தம்பிதுரை
Published on
பாஜகவினர் அதிமுகவை விமர்சித்த வந்ததால் தான் நானும் அவர்களை எதிர்த்து வந்தேன் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம், தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் வைகோ கருப்பு கொடி காட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, வைகோ தன் தோளில் போட்டிருக்கும் துண்டை தான் மோடி வரும் போது எடுத்து காண்பித்து இருப்பார் என கிண்டலாக பதிலளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com