ஆசிரியர்கள் கைது.. அண்ணாமலை பரபரப்பு ட்விட்

அறவழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களை விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com