"தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட 2 கோடி" - அமைச்சர் சாமிநாதன்
தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட 2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில், தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும் என்றும், சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டத்தில் அமைந்துள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்குக் கலையரங்கு அருகில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும், மொழிபெயர்ப்பாளர் க.ரா. ஜமதக்னிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார்.
Next Story