"தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ கோரியுள்ளார்.
"தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
Published on
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ கோரியுள்ளார். ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகம் உயர்நீதிமன்றங்களைப் போல மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தி உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற அமைப்பு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஏற்கனவே நிறைவேற்றி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்தை தவிர ஹிந்தியும் இருப்பதைப் போல், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளையும் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் அப்போது, மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com