தமிழ் மொழியை புகழ்ந்த மோடி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நன்றி

வீரத்தாய் குயிலி" நூல் வெளியீட்டு விழா

பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில், வீரத்தாய் குயிலியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் விதமாக "வீரத்தாய் குயிலி" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழை தொன்மையான மொழி என்று கூறியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியைப் போல் தமிழை, உலகம் முழுவதும் வளர்க்க ஆதரவு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com