தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் : சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பயணம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் களம் களை கட்டியுள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

* தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக காலையில் பிரசாரத்தை துவக்கிய ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீ்ர் செல்வம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளிலும் விளாத்திக்குளம் சட்டப்பேரவை தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் பிரசாரத்தை துவக்கினார்.

* பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com