"சைவ சித்தாந்தத்திற்கு சிறந்த மண் தமிழ்நாடு" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
சைவ சித்தாந்தத்திற்கு சிறந்த மண் தமிழ்நாடு என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற ஆறாவது அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது என்று தெரிவித்தார்.
சைவ சித்தாந்தத்திற்கு சிறந்த மண் தமிழ்நாடு என்று புகழாரம் சூட்டிய அவர், திருவாசகம், தேவாரம் ஆகிய புகழ்பெற்ற நூல்கள் தமிழில் உள்ளன என்றும் தெரிவித்தார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
