``மாதவிடாய் ஆனதை போட்டோ எடுத்து காட்டு'' - லேட்டாக வந்ததால் ஹரியானா கல்லூரியில் நடந்த பேரதிர்ச்சி

x

ஹரியானா மாநிலத்தில் மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த சுகாதார ஊழியர்களின் ஆடையை கலைந்து, அந்தரங்க உறுப்பை படம் பிடித்து நிரூபிக்க சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சை ஆகியுள்ளது. ரோத்தக் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 தூய்மை பணியாளர்கள் தாமதமாக வந்த நிலையில், சூப்பர்வைசர் வினோத் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் மற்றொரு பெண் ஊழியரை அழைத்து மாதவிடாய் இருப்பதை நிரூபிக்க புகைப்படம் எடுத்து வருமாறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பணி நீக்கம் செய்து விடுவோம் என மிரட்டியதால், 2 பெண்கள் கழிப்பறைக்குச் சென்று புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இதர ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் ஒரு சூப்பர்வைசரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்த நிலையில், அவர்கள் மீது ஒழுங்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் தேவைப்பட்டால் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்