சமூக வலைதளங்களில் பேசுபொருளான வக்பு உத்தரவு - விஜய் சொன்ன வார்த்தை

x

வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்கிற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு, த.வெ.க. தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இது இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தான் எப்போதும் துணை நிற்பேன் எனவும், த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்