``திமுக அரசுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி'' தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில உரிமையை நிலைநாட்டும் இந்த தீர்ப்பு, மாநில ஆட்சியமைப்புக்கும் இந்திய கூட்டாட்சித் தன்மைக்கும் வலிமை சேர்த்துள்ளதாக கூறியுள்ள முதல்வர், இந்த வெற்றி, திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பயனாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
