சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | Chandrababu Naidu | Supreme Court

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் முதல்வராக இருந்த போது, திறன் மேம்பாட்டு நிதியில் 300 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கைதான சந்திரபாபு நாயுடுவிற்கு கடந்த 20ஆம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து ஆந்திர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் சந்திரபாபு நாயுடு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. மேலும், பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com