``பாஜகவுக்கு சவுக்கடி கொடுத்த உச்ச நீதிமன்றம்’’ - வரவேற்கும் அரசியல் புள்ளிகள்
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விசிக சார்பில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பாடம் புகட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சனாதன பின்புலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பாடமாக அமையும் எனவும் திருமாவளவன் கூறினார்.
Next Story
