மாணவி பாலியல் வன்கொடுமை- பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

x

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மகளிரணியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த அரசு இருக்கும் வரை, பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனில் பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். சம்பவம் நடந்த பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறை அலட்சியத்துடன் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்