RN Ravi | முதலமைச்சர் புகைப்படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்
#chidambaram | #rnravi | #annamalaiuniversity முதலமைச்சர் புகைப்படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர் முதலமைச்சர் புகைப்படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்துடன் ஆளுநரின் கையால் முனைவர் பட்டம் பெற்ற மாணவரால் சலசலப்பு ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 87-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 1014 மாணவ-மாணவிகளுக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார். அப்போது, வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் புஷ்பராஜ், முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை கையில் வைத்தபடி பட்டம் பெற்றது மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் பேசிய அந்த மாணவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முதல்வரே பல்கலைக்கழக வேந்தர் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் கையால் பட்டம் பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
