Chengalpattu | Thirumavalavan | சாதி பெயரை கூறி மாணவி மீது தாக்குதல் - தீயாய் பரவிய வீடியோ
#Chengalpattu | #Thirumavalavan | #CasteIssue | #Attack | #ThanthiTV Chengalpattu | Thirumavalavan | சாதி பெயரை கூறி மாணவி மீது தாக்குதல் - தீயாய் பரவிய வீடியோ - நேரில் சந்தித்து திருமா நெகிழ்ச்சி செயல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் சாதி பெயரை கூறி தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வரும்போது, மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வழிமறித்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியை வயிற்றில் உதைத்து, தலைமுடியைப் பிடித்து சுவரில் இடித்ததாகவும், பொதுத்தேர்வு எழுத விடமாட்டோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியை விடுதலை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பயப்படாமல் படிப்பை தொடர வேண்டும் என ஆதரவு தெரிவித்தார்.
