மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைக்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்

மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைக்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

அதில், ஓர் ஆண்டுக்கு முன்பு மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு வாங்கியது என்றும், ஆனால், இன்றளவும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகள், இரட்டை இருப்பிடச் சான்றிதழ், தேர்வு மையங்களை ஒதுக்குவதில் நிகழ்த்தப்பட்ட கொடுமை என ஏழை-எளிய கிராமப்புற மற்றும் இந்தி பேசாத மாணவர்களை, நீட் தேர்வு வேறுபடுத்துவது உறுதியாகிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com