"தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
"தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
Published on
கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் சாலபாளையத்தில் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் கடமை, நட்பு மற்றும் தொண்டை மறக்கக் கூடாது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com